உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் - TBML கல்லூரி பேராசிரியர்

உலகின் சிறந்த விஞ்ஞானிகள் தரவரிசை பட்டியலில் நம் பொறையார் TBML கல்லூரி பேராசிரியர் முதல் முறையாக இடம் பெற்றுள்ளார். அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர். ஜான் லொன் லிடிஸ் மற்றும் அவரது குழுவினர் உலக அளவில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விஞ்ஞானிகளை அடையாளம் காணும் பட்டியலை வெளியிட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் உலகம் முழுவதும் உள்ள இரண்டு லட்சத்திற்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. இந்தியாவில் இருந்து 3500க்கும் அதிகமான விஞ்ஞானிகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக, திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலிருந்து ஐந்து பேராசிரியர்களும், இணைவு பெற்ற TBML கல்லூரியில் பணி புரியும் இயற்பியல் துறை பேராசிரியர் முனைவர் ஜோதிபாசு 2024 ஆண்டிற்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளார். முனைவர்.ஜோதிபாஸ் அவர்கள் பல்வேறு விதமான நியூ ஏஜ் நானோ மெட்டீரியல் சார்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, அவைகளில் குறிப்பிடத்தக்க வகையில் சமூகத்திற்கும் சுற்றுச்சூழல் மற்றும் விவசாயத்திற்கும் தீங்கு விளைவிக்கும் சாயப்பட்டறை கழிவுகளை சிதைக்கும் சூரிய ஒளியின் மூலம் செயல்படும் போட்டோ கேட்டலிசிஸ், இரு பரிமாணங்களை உள்ளடக்கிய கிராபைட் மற்றும் (MXene) டைட்டானியம் கார்பைடு போன்ற அதிக திறன் வாய்ந்த Nano கலவை பொருட்களின் மூலம் சக்தி சேமிப்பு, நீர் சுத்திகரிப்பு போன்ற ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றார். அது மட்டுமல்லாமல் பச்சைய முறை மூலம் தயாரிக்கப்படும் Nano வடிவிலான துகள்கள் மூலம் மருத்துவம் சம்பந்தப்பட்ட நீரழிவு எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அலர்ஜி எதிர்ப்பு போன்ற மக்கள் நலத்தை உள்ளடக்கிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். இவர் இந்த சமூகத்திற்கும் மனித வாழ்வுக்கும் மிகப் பயன் தரக்கூடிய இவ்வாராய்ச்சி வெளியீடுகளை பல்வேறு நாடுகளில் உள்ள ஆராய்ச்சி பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளார் மேலும் சர்வதேச பத்திரிகைகளில் ஆசிரியராகவும் மதிப்பாய்வாளராகவும் விளங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்