கர்த்தருடைய பெரிதான கிருபையால், இன்று 05.09.2025 தெற்கு மண்டல தமிழ் சுவிசேஷ லுத்ரன் திருச்சபை குருசேகரங்களை இரண்டு பிரிவாக பிரித்து அதில் முதல் BERC தரிசன கூடுகை நமது விருதுநகர் TELC சீர்திருத்த ஜூப்ளி ஆலயத்தை மையமாக கொண்டு காலை 10 மணி முதல் மாலை 4:30 மணி வரை நடைபெற்றது. இதில் 10 குருசேகரங்களைச் சேர்ந்த 98 நபர்கள் பதிவு செய்து பங்கு பெற்றார்கள். இவர்களுக்கு காலையில் பாடல், ஆராதனையும், அதனைத் தொடர்ந்து BERCஇன் நோக்கமும் தரிசனமும் அவர்களுக்கு விளக்கி கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வேதத்திலிருந்து ஆழமான தரிசன வார்த்தைகள் கொடுக்கப்பட்டது. மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு 2.30 மணி முதல் மாலை 4:30 மணி வரை ஒவ்வொரு ஆலய BERC குழுவினர் கூடி, ஜெபித்து, ஊழியத்திற்கான தரிசன தீர்மானங்களை எடுத்து, தனித்தனி ஆலயங்களாக ஜெபித்தார்கள். பிறகு கடைசி வேளையில் ஒரு ஆலயத்திலிருந்து ஒரு நபர் வீதம் எடுத்த தரிசன தீர்மானங்களை குறித்து விரிவாக பகிர்ந்து கொண்டார்கள். அதன் பிறகு ஜெபமும் ஆசீர்வாதமும் ஏறெடுக்கப்பட்டது. கர்த்தருடைய கிருபையினால் தரிசன கூடுகை ஆசிர்வாதமாக நடைபெற்றது. இதை குறித்ததான படங்களை இத்துடன் இணைத்துள்ளோம்.
இப்படிக்கு,
BERC Chairman
கருத்துகள்
கருத்துரையிடுக