BERC தரிசன கூடுகை கூடல் நகர்

கர்த்தருடைய பெரிதான கிருபையால், இன்று 06.09.2025  தெற்கு மண்டல தமிழ் சுவிசேஷ லுத்ரன் திருச்சபை குருசேகரங்களை இரண்டு பிரிவாக பிரித்து அதில் இரண்டாவது BERC தரிசன கூடுகை நமது  TELC தூய திரித்துவ ஆலயம், கூடல் நகர், மதுரையில் காலை 10.30 மணி முதல் மாலை 4:30 மணி வரை நடைபெற்றது. இதில் 15 குருசேகரங்களைச் சேர்ந்த 60 நபர்கள் பதிவு செய்து பங்கு பெற்றார்கள். இவர்களுக்கு காலையில் பாடல், ஆராதனையும்,  BERCன் நோக்கமும் தரிசனமும் விளக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தேவனுடைய தரிசனத்தை நிறைவேற்ற வைராக்கியம் நமக்கு வேண்டும் என்று வேதத்திலிருந்து ஆழமான தரிசன வார்த்தைகள் கொடுக்கப்பட்டது. மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு 2.30 மணி முதல் மாலை 3:30 மணி வரை நம்முடைய TELC ஆலோசனை சங்க செயலாளர் திரு. தங்கப்பழம் ஐயா அவர்கள் தேவ தரிசனத்தை நிறைவேற்றுதல் காண ஆழமான உயிர்ப்பிக்கிற செய்தியை வழங்கினார்கள் அதன் பிறகு 3.30 மணியிலிருந்து 4.30 மணி  வரை ஒவ்வொரு ஆலய BERC குழுவினர் கூடி, ஜெபித்து, ஊழியத்திற்கான தரிசன தீர்மானங்களை எடுத்து, தனித்தனி குழுக்களாக ஜெபித்தார்கள். அதன் பிறகு ஜெபமும் ஆசீர்வாதமும் ஏறெடுக்கப்பட்டது. கர்த்தருடைய கிருபையினால்  தரிசன கூடுகை ஆசிர்வாதமாக நடைபெற்றது. இதை குறித்ததான படங்களை இத்துடன் இணைத்துள்ளோம். 

இப்படிக்கு,

BERC Chairman





கருத்துகள்