நமது பேராயர் ஐயா அவர்களின் வழிகாட்டுதலின்படி சீகன் பால்க் அருட்பணி இயக்கத்தின் மிஷினரி கூடுகை கிருஷ்ணகிரி அருகில் உள்ள போத்தி நாயனபள்ளியில் உள்ள பெத்தேல் ஆலயத்தில் 20/09/2025 சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்றது இந்த நிகழ்வில் நமது ZMM இயக்குனர் மிஷினரி பயிற்சியாளர் திரு ஜான் சக்திவேல் மேற்கு மண்டல அமைப்பாளர் ஈரோடு திரு J எபினேசர் மேற்கு மண்டல மிஷனரி கண்காணிப்பாளர் திரு ஜான் கிருபாகரன் அவர்களும் வடமேற்கு மண்டலத்தில் உள்ள அனைத்து மிஷினரிகளும் கலந்து கொண்ட ஒரு நாள் பயிற்சி மற்றும் பணி ஆய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது புதிய ஆத்தும ஆதாயப்பனி மற்றும் எல்லைகளை விரிவாக்குவது பனிக்களங்களில் காணப்படுகின்ற பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது விரைவில் ஆலயங்களை ஆங்காங்கே உருவாக்குவது இரண்டாவது கட்டத்தை நோக்கி நமது பணிகளை நகர்த்துவது போன்ற காரியங்கள் கலந்து ஆலோசிக்கப்பட்டது கூட்டங்களின் வழியாக அனைத்து மிஷனரிகளும் புதிய உற்சாகத்தோடு கடந்து சென்றனர் எதிர்வரும் நாட்களில் இன்னும் அதிகமாக ஆத்தும ஆதாயப் பணியில் தாங்குனர்களை உருவாக்குவதோடு கூட புதிய ஊழியப் பகுதிகளை கண்டுபிடிப்பது போன்ற காரியங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டது அனைத்து ஏற்பாடுகளையும் திரு&திருமதி வில்லியம் பீட்டர் & ரூத் ஜூலியட் தம்பதியினர் ஏற்பாடு செய்திருந்தனர் ஆண்டவருக்கே மகிமை உண்டாவதாக 🟥இயக்குனர் ZMM
கருத்துகள்
கருத்துரையிடுக