25.01.2026 காலை 8.30 மணிக்கு பெங்களூர், ஜீவனஹள்ளி குருசேகரத்தில் திருச்சபை ஆண்டு விழா, நன்றி வழிபாடு, குடும்ப கூடுகை என முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது. தரங்கை மகாகனம் அத்தியட்சர் Rt.Rev.Dr.A. கிறிஸ்டியன் சாம்ராஜ் ஐயா அவர்கள் கலந்து கொண்டு இறைசெய்தி வழங்கினார்கள். மக்கள் திரளாக பங்கு பெற்று இறையாசி பெற்றனர். தொடர்ந்து நடைபெற்ற குடும்ப கூடுகையில் "குடும்பம்: கிறிஸ்துவின் மந்தை" என்ற கருப்பொருளில் தசுலுதி துணைத்தலைவர் மறைதிரு. J.ஸ்டான்லி தேவகுமார் ஐயா அவர்கள் சிறப்பு செய்தி வழங்கினார்கள். உயர் கல்வி கழகத் தலைவர் மறைதிரு.V.A குணாளன் பாக்கியராஜ் ஐயா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். இணை பொருளர் திருமிகு. ஜான்சன் நேசப்பா அவர்களும் இந்த சிறப்பு நிகழ்வில் பங்கு பெற்று தன் வாழ்த்தினை பகிர்ந்து கொண்டார்கள்.







கருத்துகள்
கருத்துரையிடுக