தரங்கைப் பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி, ( TBML College ) பொறையார், 22.01.2026 அன்று வியாழக்கிழமை தமிழ்த் துறையின் சார்பாக, முதல் ஒரு நாள் பன்னாட்டு கருத்தரங்கம் பேராயர் அவர்களின் ஆசியோடும், வாழ்த்துக்களோடும், இனிதே தொடங்கியது. துவக்க இறைவேண்டலை பொறையார் குருசேகர ஆயர் மறைதிரு.ஜான்சன் மான்சிங் அவர்கள் ஏறெடுத்தார்கள். தமிழ்த் துறைத்தலைவர் முனைவர். வி. பிரிட்டா ஜாஸ்மின் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
கருத்தரங்கின் நோக்க உரையை, முனைவர்.பா. புகழேந்தி அவர்கள் நிகழ்த்த கருத்தரங்கத்தின் தலைமையேற்று முனைவர்.சு. ஜான்சன் ஜெயக்குமார் கல்லூரி முதல்வர் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார். பன்னாட்டுக் கருத்தரங்க நூலினை வெளியிட்டு ஆசியுரையும் வாழ்த்துரையும் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் துணைத் தலைவர் மறைதிரு. ஜா. ஸ்டாலின் தேவக்குமார் அவர்கள் நிகழ்த்தினார்.
இலங்கையில் கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து வருகை தந்த சிறப்பு விருந்தினர் முனைவர் வானதி பிரகதி சிறப்புரையாற்றினார்கள். கருத்தரங்கம் 3 அமர்வுகளாக நடைபெற்றது. வாதங்களும், விவாதங்களும் நிறைந்த அரங்குகளாக நிறைவேறியது. நிறைவு நிகழ்ச்சியில் ஏவிசி கல்லூரினுடைய தமிழ் துறைத்தலைவர் முனைவர் சு தமிழ்வேல் அவர்கள் நிறைவு உரையாற்றினார்.
தமிழ்த்துறை நடத்திய முதல் பன்னாட்டுக் கருத்தரங்கம் மிகவும் பயனுள்ள நிகழ்வாக அமைந்தது.








கருத்துகள்
கருத்துரையிடுக