தையல் பயிற்சி பள்ளி -மயிலாடுதுறை

கடவுளின்  கிருபையால், மயிலாடுதுறையில் உள்ள பெண்கள் மையத்தில் உள்ள, தொற்காள் தையல் பயிற்சி மையத்தில், இன்று  தையல் பயிற்சி பள்ளி தொடங்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.திருமதி கீதா கிறிஸ்டோபர், பெண்கள் ஐக்கிய சங்க பொருளர் அனைவரையும் வரவேற்றார்கள்.இந்த நிகழ்வுக்கு, மயிலாடுதுறை 2 இல் பணியாற்றும் மறைதிரு. செபாஸ்டியன் ஜெயராஜ் அவர்கள் ஆரம்ப ஜெபத்தில் வழி நடத்தினார்கள். மறை மாவட்டத் தலைவர் மற்றும் இம்மானுவேல் ஆலயத்தின் தலைமை  போதகருமான Rev. ஜான் தினகர் அவர்கள்.  இறைசெய்தி அளித்து  சிறப்பித்தார்கள். நமது கனம் பேராயர் அய்யா அவர்களின் வாழ்த்துச் செய்தி பகிரப்பட்டது. அதைத்தொடர்ந்து, பொதுச்செயலர் அவர்களால், தையல் பள்ளியை பற்றிய முகவுரை கொடுக்கப்பட்டது. ஏழைப் பெண்கள், விதவைகள் மற்றும் திக்கற்றோரின் முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்டிருக்கின்ற இந்த தொற்காள் தையல் பள்ளியில் சுமார் முப்பது பெண்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்து ஆர்வமுடன் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. Dr.பெர்னீஸ் அவர்கள் முடிவு ஜெபத்தில் வழி நடத்தினார்கள். பெண்கள் ஐக்கிய சங்க பொதுச் செயலர் நன்றி நவில நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.இந்த தையல் பள்ளி ஆதரவின்றி, கடை நிலையில் உள்ள பெண்களுக்கு பயன்பட ஜெபிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.

மறைதிருமதி. கிருபலதா ஆனந்த்,

WF/GS




கருத்துகள்