ஆனைமலை II ( செம்மேடு) என்னும் புதிய குருசேகரம்

26.04.2026 இன்று தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் மகாகனம் தரங்கை அத்தியட்சர் அவர்களின் உத்தரவின்படியும், கணம் ஆலோசனை சங்கத் தீர்மாணத்தின்படியும்  ஆனைமலை I குருசேகரத்தை சேர்ந்த செம்மேடு, வேட்டைக்காரன் புதூர், பெரியபோது, வாழைக்கொம்பு, அம்பராம்பாளையம், நல்லூத்துக்குளி, சாமியாண்டிபுதூர் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய ஆனைமலை  II  ( செம்மேடு) என்னும் புதிய குருசேகரம் மகாகனம் தரங்கை அத்தியட்சர் அவர்களால் அறிவிப்பு ஆணை வாசிக்கப்பட்டு திருநிலைப்படுத்தப்பட்டது.  இந்த தெய்வீக வழிபாட்டில் கனம் ஆலோசனை சங்க செயலர், பொருளர் மற்றும் கல்விக் கழக தலைவர்கள், ஆலோசனை சங்க உறுப்பினர்கள் மறை மாவட்ட தலைவர்கள் ஆயர்கள், சபையார் கலந்து கொண்டார்கள்.





கருத்துகள்