முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
சர்வதேச பாலின (Gender) கோடைக்கால அகாடமி - லிலோங்வே,மலாவி
சர்வதேச பாலின (Gender) கோடைக்கால அகாடமி ஜூன் 21 முதல் 28 வரை தென்கிழக்கு ஆப்பிரிக்காவின் மலாவி நாட்டிலுள்ள லிலோங்வே நகரில் நடைபெற்று வருகிறது. இதில் *தசுலுதி பெண்கள் ஐக்கியச் சங்கத்தின் பொதுச் செயலாளர்* கலந்து கொண்டு, இரண்டு அமர்வுகளை வழிநடத்தும் சிறப்பான வாய்ப்பைப் கர்த்தர் வழங்கினார்.“பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகள்”* என்ற தலைப்பில் நடத்திய அமர்வு, பங்கேற்பாளர்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.மேலும், *சங்கீதம் 139*-ஐ பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து வழங்கிய சிறப்பு வேதாகமப் படிப்பு, கலந்து கொண்ட தலைவர்களிடமிருந்து மிகவும் நேர்மறையான வரவேற்பைப் பெற்றது.நமது திருச்சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த அரிய வாய்ப்பை வழங்கிய இறைவனுக்கும், அதற்கான வாய்ப்பை அளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக