கர்த்தரின் பெரிதான கிருபையால் 2024 ஜனவரி 15,16 பாண்டிச்சேரி அருகில் இருக்கும் முகையூரில் பரமன்கேனி ஆன்மிக மன்றத்தில் தசுலுதி பெண்கள் ஐக்கிய சங்க 35வது மாநில மாநாடு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பாக நடைபெற்றது. தசுலுதி மகாகனம் தரங்கை அத்தியட்சர் Rt.Rev.Dr.A. கிறிஸ்டியன் சம்ராஜ் ஐயா அவர்களின் தலைமையில், பெண்கள் ஐக்கிய சங்க தலைவர் பேராயரம்மா மற்றும் செயலர், கனம் ஆலோசனை சங்க செயலர் திரு.R.தங்கப்பழம் அவர்கள், துணைத்தலைவர், கல்விக்கழகத் தலைவர்கள், ஆலோசனை சங்க உறுப்பினர்கள், கண்காணிப்பு ஆயர்கள், மறைமாவட்டத் தலைவர்கள், ஆயர் பெருமக்கள் மற்றும் அனைத்து குருசேகரங்களையும் சார்ந்த பெண்கள் ஐக்கிய சங்க உறுப்பினர்கள் சுமார் 1900 பேர் திரளாக பங்குபெற்றனர். இந்த இரண்டு நாட்களும் மூன்று தேவ செய்தி கொடுக்கப்பட்டது,மனதிற்கு மகிழ்சி தரக்கூடிய பாடல் போட்டி,நடன போட்டி,கட்டுரை போட்டி,அருளுரை போட்டி,வேதாகம போட்டி போன்ற எல்லா நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றது.கர்த்தருக்கே தோத்திரம்.
கருத்துகள்
கருத்துரையிடுக