7-2-24 புதன்கிழமை மாலை தரங்கை தசுலுதி சீகன்பால்கு அருங்காட்சியகத்தில் ஜெர்மனியை சார்ந்த Saxony-Anhalt Art Foundation சார்பில் Art Gallery Exibition தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வை தரங்கை மகாகனம் அத்தியட்சர் Rt.Rev.Dr.A. கிறிஸ்டியன் சாம்ராஜ் ஐயா அவர்கள் ஜெபித்து துவங்கி வைத்தார்கள். சிறப்பு விருந்தினராக Consul General of Federal Republic of Germany,Mrs.Michaela Kuechler, Francke Foundation Director,Prof.Dr.Thomas Muller Bahlke மற்றும் குழுவினர், Saxony-Anhalt, Director Dr.Manon Bursian மற்றும் குழுவினர் கலந்து கொண்டனர். பேராயரம்மா, தசுலுதி கனம் ஆலோசனை சங்க செயலர் திரு.R.தங்கப்பழம் அவர்கள், கனம் ஆலோசனை சங்க உறுப்பினர்கள், SEDB இயக்குநர், ஆயர் பெருமக்கள் மற்றும் சபையார் திரளாக கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியை Dr. சாமுவேல் மனுவேல் மற்றும் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதன் மூலமாக 300 ஆண்டுகளுக்கு மேலாக நமக்கும் இந்த நிறுவனங்களுக்கும் உள்ள தொடர்பு கர்த்தரின் பெரிதான கிருபையாலும், நமது பேராயரின் சீரிய முயற்சியாலும் மீண்டும் புத்துயிர் பெற்று இதன் மூலமாக நமது தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபைக்கு மேலும் பல நன்மைகள் கிடைக்க இது ஒரு பாலமாக இருக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக