தென்மண்டல ஒரு நாள் "இளைஞர் இயக்க மாநாடு" - மதுரை கூடல் நகர் ஆலயம்

 

10-2-24 இளைஞர் இயக்கத்தின் சார்பாக மதுரை கூடல் நகர் ஆலயத்தில் தென்மண்டல ஒரு நாள் "இளைஞர் இயக்க மாநாடு" சிறப்பாக நடைபெற கர்த்தர் உதவி செய்தார் ‌. நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு கர்த்தருடைய வார்த்தையை கேட்டு தங்கள் தாலந்துகளை வெளிப்படுத்தி உற்சாகமாய் இந்த நிகழ்விலே கலந்து கொண்டார்கள். காலையிலே நடைபெற்ற துவக்க நிகழ்வில் ஆட்சி மன்ற உறுப்பினர் டாக்டர் எஸ் ஆர் அண்ட்ரூஸ் ரூபன் ஐயா அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார்கள் ‌. மாலையில் நடைபெற்ற முடிவு நிகழ்வில் மரியாதைக்குரிய ஆலோசனை சங்க செயலாளர் தங்கப்பழம் ஐயா அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி வெற்றி பெற்ற பிள்ளைகளுக்கு பரிசளித்து மகிழ்ந்தார்கள். 

 TELC ஊத்துக்குளி குருசேகர ஆயர் மறை திரு. ஆபிரகாம் சாமுவேல் ஐயா அவர்கள் கர்த்தருடைய வார்த்தையை வழங்கினார்கள். கண்காணிப்பாளர் மற்றும் மதுரை மாவட்ட தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.












கருத்துகள்