கர்த்தரின் பெரிதான கிருபையால் தசுலுதி புதிய நிர்வாக அலுவலகம் மற்றும் மத்திய கருவூல கட்டடம் புதுப்பித்தல் அடிக்கல் நாட்டு விழா 9 -2 -24 காலை சரியாக 7 மணிக்கு திருச்சி தரங்கைவாச வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தரங்கை மகாகனம் அத்தியட்சர் Rt.Rev.Dr.A.கிறிஸ்டியன் சாம்ராஜ் ஐயா அவர்கள் தலைமையில், தசுலுதி கனம் ஆலோசனை சங்க செயலர் திரு.R. தங்கப்பழம் அவர்கள் முன்னிலையில், மாண்புமிகு அமைச்சர் K.N. நேரு, தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அவர்களும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் அவர்களும் நிகழ்ச்சியில் நேரில் வந்து கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்கள். இந்த நிகழ்வில் கனம் ஆலோசனை சங்க உறுப்பினர்கள், மறைமாவட்டத்தலைவர், ஆயர் பெருமக்கள், ஜோசப் கண் மருத்துவமனை சேர்மன் மற்றும் பணியாளர்கள், மாணவர்கள், மத்திய அலுவலகப் பணியாளர்கள், தூய திரித்துவப் பேராலயத்தின் சபைசங்க உறுப்பினர்கள், தசுலுதியின் இயக்கங்களின் தலைவர்கள், திருச்சி மாவட்டத் தலைவர்,தூய திரித்துவப் பேராலய சபையார் மற்றும் வெளியூர்களிலிருந்து சபையார் திரளாக கலந்துக் கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக