ஜெர்மனி, Halle யில் உள்ள "Francke Foundation" ன் Director, Dr. Mueller Bahlke, மற்றும் அவருடைய குழுவினர் வருகை
தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையை ஏற்படுத்திய சீகன் பால்கு, புளூட்சோ மற்றும் அதனை தொடர்ந்து அநேக மிஷனரிமார்களை இந்தியாவிற்கு அனுப்பி வைத்த ஜெர்மனி, Halle யில் உள்ள "Francke Foundation" ன் Director, Dr. Mueller Bahlke, மற்றும் அவருடைய குழுவினர் 3-2-24 சனிக்கிழமை காலை திருச்சி தரங்கை வாசத்திற்கு வருகை புரிந்தனர். பேராயரின் இல்லத்தில் அவர்களை வரவேற்ற பின்,பேராயரின் அலுவலகத்தில், பேராயரம்மா,தசுலுதி பொருளாளர், உயர்கல்வி மற்றும் தொடக்க கல்வி தலைவர்கள், SEDB மற்றும் விடுதிக்கழக தலைவர்கள், கம்யூனிகேஷன்& டெவலெப்மெண்ட் இயக்குநர், கனம் ஆலோசனை சங்க உறுப்பினர் மறைதிரு. Dr. தாமஸ் கென்னடி அவர்களும் கலந்துக் கொண்டனர், 1706 ஆம் ஆண்டு தொடங்கி கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்கு மேல் இந்த நிறுவனத்திற்கும் நமக்கும் உள்ள பங்காளர் தொடர்பு மீண்டும் புத்துயிர் பெற்று தொடர்ந்திட கர்த்தர் கிருபை செய்தார், இதன் மூலம் நம் திருச்சபைக்கு அநேக நன்மைகள் மீண்டும் கிடைக்கப் பெறவும் இந்த சந்திப்பு ஒரு வாய்ப்பாக அமைந்தது. தரங்கம்பாடி சீகன் பால்கு இல்லத்தில் உள்ள அருங்காட்சியகம் இவர்களின் முயற்சியாலும், பங்களிப்பாலும் தொடங்கப்பட்டு இன்று வரை நடந்து வருகிறது. வருகின்ற 7-2-24 புதன்கிழமை, தரங்கம்பாடி சீகன்பால்கு அருங்காட்சியகத்தில் ஒரு பொருட்காட்சியை தொடங்க வந்திருக்கும் இவர்கள், இன்று நமது பள்ளிகள், விடுதிகள், மாணவ மாணவிகள், ஜோசப் மருத்துவமனை ஆகியவற்றை பார்வையிட்டு அதன் செயல்பாடுகளை கேட்டறிந்தனர். அந்த நிகழ்வுகளின் தொகுப்புகளில் சில.
கருத்துகள்
கருத்துரையிடுக