06.02.2024 மயிலாடுதுறை மாவட்டம், பொறையார், TBML கல்லூரி.கல்லூரி செயலர், கல்லூரி செயல்பாடுகள் குறித்து பார்வையிடல் (ADMINISTRATIVE ACADEMIC AUDIT)
06.02.2024 காலை வருகை புரிந்த தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் தலைவர்/பேராயர் நம் கல்லூரியின் தாளாளர்/செயலர். மாமறைதிரு. Dr.A. கிறிஸ்டியான் சாம்ராஜ் அவர்கள், முதலாவதாக கல்லூரி முதல்வர். Dr.S. ஜான்சன் ஜெயக்குமார், காசாளர். Dr.D. ஜூலியஸ் விஜயகுமார், துணை முதல்வர். Dr. பியூலா தங்கராஜ் மற்றும் அனைத்து துறைத் தலைவர்களுடன் Staff Council கலந்துரையாடல் கூடுகையில் பங்கேற்றார்.
பின், அனைத்து துறைகளுக்கும் பேராயர் நேரடியாகச் சென்று பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கல்லூரி செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்கள்.
தொடர்ந்து, நிர்வாக பணியாளர்களை சந்தித்தார்கள்.
📌 ஒரு முழு பணி நாளும் கல்லூரி வளாகத்தில் வலம் வந்து அனைத்து தரப்பினரையும் சந்தித்து ஆய்வு செய்து ஆலோசனை அளித்து ஆசி வழங்கிய பேராயர் ஐயாவின் மாண்பினை அனைவரும் வியந்து போற்றி நன்றி தெரிவித்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக