9-4-24 செவ்வாய்க்கிழமை, சூலூர், தசுலுதி தூய மீட்பர் ஆலயத்தில் காலை 9 மணி முதல், மேற்குமண்டல இளைஞர் இயக்க ஒரு நாள் வாலிபர் மாநாடு நடைபெற்றது. தசுலுதி கனம் ஆலோசனை சங்க உறுப்பினர், துணைத் தலைவர் மறைதிரு.J. ஸ்டேன்லி தேவக்குமார் ஐயா அவர்கள் கொடியேற்றி மாநாட்டை துவக்கி வைத்தார்கள், கனம் ஆலோசனை சங்க உறுப்பினர், உயர்கல்விக்கழகத் தலைவர் மறைதிரு.V.A.குணாளன் பாக்கியராஜ் ஐயா அவர்கள் ஜெபித்து, எல்லோரையும் வரவேற்றார்கள். மறைமாவட்டத்தலைவர், மேற்கு மண்டல ஆயர் பெருமக்கள், திரளான வாலிப பிள்ளைகள் கலந்து கொண்டு தேவ பிரசன்னத்தை பெற்றுக் கொண்டார்கள். இளைஞர் இயக்க பொதுச் செயலர் இந்த மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.
கருத்துகள்
கருத்துரையிடுக