25-4-2024 மாலை முதல் 27-4-2024 மாலை வரை மேற்கு மண்டல BERC -கு தரிசன பயிற்சி முகாம் ஆனைமலை பொள்ளாச்சியில் ஆண்டவருடைய கிருபையினால் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாடல் ஆராதனையும் இந்த கூடுகையின் தரிசன நோக்கத்தை குறித்து செய்தி பகிர்ந்து கொள்ளப்பட்டது. முதல் நாள் தேவ செய்தியை மறைதிரு.V.A. குணாளன் பாக்கியராஜ் ஐயா, கனம் ஆலோசனை சங்க உறுப்பினர் மற்றும் உயர் கல்விக்கழகத் தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.இரண்டாம் நாள் மாலை கூட்டம் Rev. Charles Isaac Raj அவர்களால் சந்தியா கூட்டம் ஆண்டவருடைய கிருபையினால் நடைபெற்றது.மூன்றாம் நாள் நிகழ்வின் தேவ செய்தியை மறைதிரு.நெல்சன் ஜார்ஜ் ஐயா, மறைமாவட்டத் தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.மூன்றாம் நாள் இறுதி தியானம் Rev. கிறிஸ்டோபர் மனுவேல் செல்லப்பா அவர்களால் தேவனுடைய வார்த்தை பகிரப்பட்டது, மேலும் இந்த கூட்டத்தில் பங்கு பெற்றவர்களுக்கு அவர்களால் சான்றிதழ்கள் ஜெபத்துடனே வழங்கப்பட்டது.
கருத்துகள்
கருத்துரையிடுக