தசுலுதி நன்னம்பிக்கை புதிய ஆலய திருநிலைப்படுத்துதல் பரிசுத்த ஆராதனை

14-5-24 செவ்வாய் கிழமை மாலை 5 மணிக்கு, மந்திரிப்பாளையம் குருசேகரத்தை சார்ந்த, நாதகவுண்டன்பாளையம், தசுலுதி நன்னம்பிக்கை புதிய ஆலய திருநிலைப்படுத்துதல் பரிசுத்த ஆராதனை நடைபெற்றது. தரங்கை மகாகனம் அத்தியட்சர் Rt.Rev.Dr.A. கிறிஸ்டியன் சாம்ராஜ் ஐயா அவர்கள் ஜெபித்து ஆலயத்தை திருநிலைப்படுத்தி, தேவ செய்தியை வழங்கினார்கள்.இந்த நிகழ்வில் தசுலுதி துணைத் தலைவர், கனம் ஆலோசனை சங்க உறுப்பினர்கள்,  மறைமாவட்டத் தலைவர், ஆயர் பெருமக்கள் மற்றும் சபையார் திரளாக கலந்துக் கொண்டனர். மறைதிரு. M. காருண்யா சாந்தசீலன் சபைகுரு/தலைவர் மந்திரிப்பாளையம் குருசேகரம், அவர்கள் இந்த நிகழ்வை மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தார்கள்.



கருத்துகள்