சினோடு தொடர்பு கூட்டம் (SCC 2023-2024 )

கர்த்தரின் பெரிதான கிருபையால் தசுலுதி SCC 2023-2024  சினோடு தொடர்பு கூட்டம் 21,22 மே 2024,செவ்வாய்கிழமை மற்றும் புதன்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பான முறையில் திருச்சி தரங்கைவாசத்தில் உள்ள ஷாலோம் அரங்கில் நடைபெற்று, நிறைவடைந்தது. செவ்வாய்கிழமை காலை 7.30 மணிக்கு  தொடங்கிய நிகழ்வுகள், வருகைப் பதிவிற்கு பின் கிட்டத்தட்ட 9 மணிக்கு கூட்டம் ஜெபத்துடன் துவங்கியது. இந்த நிகழ்வில் தரங்கை மகாகனம் அத்தியட்சர், கனம் ஆலோசனை சங்க செயலர், துணைத் தலைவர், பொருளாளர், கல்விக்கழகத் தலைவர்கள், கனம் ஆலோசனை சங்க உறுப்பினர்கள், SCC உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள், அதிகாரப்பூர்வ பார்வையாளர்கள், அழைப்பாளர்கள் கலந்துக் கொண்டனர். நம்மைவிட்டு பிரிந்த ஆயர்கள் மற்றும் தலைவர்களுக்கு இரங்கல் அனுசரிக்கப்பட்டது. அதன்பிறகு முதல் நாளின்  திட்டமிட்ட தலைவர் அறிக்கை, அதன் மீதான விவாதம், அதனைத்தொடர்ந்து பொருளாளரின் அறிக்கை மற்றும் வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அனைவராலும் ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்பட்டது. புதன்கிழமை காலை எட்டு மணிக்கு பரிசுத்த இராப்போஜன ஆராதனை தூய திரித்துவப் பேராலயத்தில் நடைபெற்று, அதனைத்தொடர்ந்து திட்டமிட்ட இரண்டாம் நாளுக்குரிய அனைத்து நிகழ்வுகளும் ஒருங்கே நடைபெற்றது. இந்த நாளில் தங்களது திருமணநாள் மற்றும் பிறந்தநாளை அனுசரிப்பவர்களை மேடைக்கு அழைத்து  அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இந்த ஆண்டு ஒய்வு பெறும் நமது ஆயர் பெருமக்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து அவர்களின் பணிக்கொடை வழங்கப்பட்டது.         

நிறைவாக செயலர் அவர்களின் கருத்துப்பரிமாற்றத்திற்குப் பின், பேராயர் அவர்களின் ஜெபம் ஆசிர்வாதத்துடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.         இரண்டு நாள் கூட்டமும் எவ்வித இயற்கை மற்றும் மனித இடர்பாடின்றி  இனிதே நிறைவு பெற்றது. இந்த கூட்டத்தின் வாயிலாக முன்னெடுக்கப்பட்ட  திருச்சபையின் எதிர்கால நன்மைக்கான அனைத்து தீர்மானங்களும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.











கருத்துகள்