தரங்கம்பாடியில் சீகன் பால் ஐயர் அவர்களுக்கு மணிமண்டபம்

25-06-2024 செவ்வாய்க்கிழமை மாலை 6:30 மணிக்கு  தரங்கை மகாகனம் பேராயர் Rt.Rev.Dr.A. கிறிஸ்டியன் சாம்ராஜ் ஐயா அவர்கள் டிவிக்கு பேட்டி கொடுத்தார்கள். 318 ஆண்டுகள் பாரம்பரியமிக்க சீகன் பால்  ஐயர் அவர்களுக்கு தமிழக அரசு சட்டமன்றத்தில் நடைபெற்ற மானிய கோரிக்கையில், தரங்கம்பாடியில் சீகன் பால் ஐயர் அவர்களுக்கு  மணிமண்டபம் கட்டுவதற்கு ஒப்புதல் அளித்ததை குறித்து தமிழக முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் ஐயா அவர்களுக்கும், அமைச்சர்கள் மாண்புமிகு கீதாஜீவன் மாண்புமிகு சாமிநாதன் மாண்புமிகு மஸ்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. பொறையார் நிவேதா முருகன் திரு. இனிக்கோ இருதயராஜ் அவர்களுக்கும் , சிறுபான்மையினர் வாரியத் தலைவர் அனைவருக்கும் நன்றி கூறி பேட்டி அளித்தார்கள். உடன் வடக்கு மண்டல கண்காணிப்பு ஆயர், ஆயர் பெருமக்கள் மற்றும் சபையார் உடனிருந்தனர்.



கருத்துகள்