ஆயர் இல்லம் திறப்பு விழா

19-6-2024 ஆண்டிமடம் குருசேகரம், தசுலுதி ஜான்சன் நல்மேய்ப்பர் ஆலயம், வெளிச்சங்குடி, புதிதாக கட்டப்பட்ட "HOLDE & SUSANNE HOUSE" ஆயர் இல்லம் திறப்பு விழாவில், தரங்கை மகாகனம் அத்தியட்சர் Rt.Rev.Dr.A.கிறிஸ்டியன் சாம்ராஜ் ஐயா அவர்கள் ஜெபித்து திருநிலைப்படுத்தி ஆசிர்வதித்தார்கள். Mrs.Dr.எஸ்தர் சாம்ராஜ் பேராயரம்மா குத்து விளக்கை ஏற்றி வைத்தார்கள். தசுலுதி கனம் ஆலோசனை சங்க செயலர் திரு.R.தங்கப்பழம் அவர்கள் கல்வெட்டை திறந்து வைத்தார்கள். இந்த நிகழ்வில் தசுலுதி உதவித்தலைவர், கனம் ஆலோசனை சங்க உறுப்பினர்கள், ஆயர் பெருமக்கள், சபையார் திரளாக கலந்துக்கொண்டனர்.




கருத்துகள்