மிசியோன் தோத்திர பண்டிகையை முன்னிட்டு சீகன்பால்கு அருங்காட்சியகத்தில் உன்னத சிறகுகள் Church Heritage குழுவின் வழியாக வரலாற்று நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டு மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல ஊர்களில் இருந்து சுமார் 50 பேர் கலந்து கொண்டார்கள். அச்சமயம் மகாகனம் தரங்கை பேராயர் மாமறை திரு. கிறிஸ்டியன் சாம்ராஜ் அவர்கள் அருங்காட்சியகத்திற்கு வருகை தந்து மிசியோன் தோத்திர பண்டிகை திருநாள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவித்தார்கள். பேராயர் அம்மா ,த.சு.லு.தி உபதலைவர் மறைதிரு. ஸ்டான்லி தேவக்குமார் தரங்கை சபைகுரு . சாம்சன் மோசஸ், அருங்காட்சியகத்தின் இயக்குனர் டாக்டர். சாமுவேல் மனுவேல் உடனிருந்தார்கள். மதியத்திற்கு மேல் அருங்காட்சியகத்தில் Early Science Activities in Tranquebar என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. மிஷனரி சீகன்பால்குவை தொடர்ந்து தரங்கம்பாடிக்கு வந்த அனைத்து மிஷனரிகளின் தியாகமான பணிகளை நினைவு கூர்ந்து நன்றி செலுத்தும் விதமாக நடைபெற்றது.
கருத்துகள்
கருத்துரையிடுக