Mission Thanksgiving Day - July 9

ஜூலை 9, 2024, தரங்கம்பாடி, கர்த்தரின் பெரிதான கிருபையால் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் சபையாராக, சபையின் அங்கத்தினராக நாம் இந்த நாளில் நமக்காக அனுப்பப்பட்ட மிஷனரிமார்களுக்கு நன்றி தெரிவிக்கும் நன்னாளில், தசுலுதி தரங்கை மகாகனம் அத்தியட்சர் அவர்கள், பேராயரம்மா அவர்கள்,கனம் ஆலோசனை சங்க செயலர் அவர்கள், துணைத் தலைவர் அவர்கள், பொருளாளர், கல்விக்கழகத் தலைவர்கள், ஆலோசனை சங்க உறுப்பினர்கள், ஆயர் பெருமக்கள் மற்றும் சபையார் திரளாக கலந்துக் கொண்டு தரங்கை சீகன் பால்கு ஆயர் வந்திறங்கிய நினைவிடத்திலும், திருவுருவச்சிலைக்கும் மரியாதை செய்தனர். இந்த நிகழ்வில் பூம்புகார் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு. நிவேதா முருகன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்.





9-7-24 செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு திருச்சி தரங்கைவாசம் வளாகத்தில் உள்ள மிஷனரிமார்கள் சீகன்பால்கு மற்றும் புளூச்சோ அவர்களின் சிலைகளுக்கு திருச்சி மறைமாவட்டத்தின் சார்பாக மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் கனம் ஆலோசனை சங்க உறுப்பினர் திரு. ஜான்சன் நேசப்பா அவர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். திருச்சி மறைமாவட்டத் தலைவர் மறைதிரு.சாமுவேல் ஆபிரகாம் ஐயா அவர்கள் மற்றும் ஆயர் பெருமக்கள், ஜோசப் கண் மருத்துவமனை அதிகாரிகள், தூய திரித்துவப் பேராலய சபை சங்க உறுப்பினர்கள், சபையார் கலந்துக் கொண்டனர்.



09.07.2024, Rev V.A. Gunalan Bakiyaraj, Higher Education  board Chairman, Dr. S.R.  Andrews Ruben, Elementay Education  Board Chairman and School HM Dr. S. John Simon at BJM Hr. Sec. School, Tharangambadi in where Rev. Ziegenbalg's residence located.








கருத்துகள்