26-7-24 வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு, திருச்சி தரங்கை வாசத்தில் உள்ள ஜெப மையத்தில், தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் கனம் ஆலோசனை சங்கம் தெரிவு செய்யப்பட்டு ஓராண்டை வெற்றிக்கரமாக நிறைவு பெற கர்த்தர் செய்த மிகப்பெரிய கிருபைக்காக நன்றி செலுத்தும் கூடுகை தரங்கை மகாகனம் அத்தியட்சர் Rt.Rev.Dr.A. கிறிஸ்டியன் சாம்ராஜ் ஐயா அவர்கள் தலைமையில், கனம் ஆலோசனை சங்க செயலர் திரு.R. தங்கப்பழம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. திருச்சி மறைமாவட்டத் தலைவர் Rev.சாமுவேல் ஆபிரகாம் ஐயா அவர்கள் துவக்க ஜெபத்துடன் கூடுகை தொடங்கியது.இந்த நிகழ்வை துணைத் தலைவர் Rev.J. ஸ்டேன்லி தேவக்குமார் ஐயா அவர்கள் தொகுத்து வழங்கினார்கள், பொருளாளர், உயர் கல்விக்கழகத் தலைவர் Rev.V.A. குணாளன் பாக்கியராஜ் ஐயா வேத வசனத்தை படித்தார்கள்., ஆலோசனை சங்க உறுப்பினர்கள், மறைமாவட்டத் தலைவர்கள், ஆயர் பெருமக்கள், மத்திய அலுவலகப் பணியாளர்கள், தூய திரித்துவப் பேராலய சபை சங்கத்தினர், சபையார் கலந்துக் கொண்டார்கள். மகாகனம் பேராயரின் துவக்க தியானத்திற்கு பிறகு, கடந்த ஓராண்டில் கனம் ஆலோசனை சங்கம் மூலம் திருச்சபைக்கு செய்து முடித்த காரியங்கள் குறித்து கனம் ஆலோசனை சங்க செயலர் திரு.R. தங்கப்பழம் அவர்கள் தெளிவாக விளக்கி நன்றிகளைத் தெரிவித்தார்கள். பொருளாளர் திரு. S. ஞானப்பிரகாசம், அவர்கள் திருச்சபையின் நிதிநிலை குறித்து தெளிவான குறிப்புகளை தெரிவித்து விளக்கினார்கள். கனம் ஆலோசனை சங்க உறுப்பினர் Dr.N. அடைக்கலசாமி அவர்கள் மற்றும் தொடக்கக்கல்வி தலைவர் Dr.S.R. ஆண்ட்ரூஸ் ரூபன் அவர்கள் தங்கள் சாட்சிகளை பகிர்ந்து கொண்டார்கள். அலுவலகப் பணியாளர் சார்பாக கணக்காளர் திரு. ஜான் பாஸ்கர் அவர்கள் தனது சாட்சியை பகிர்ந்து கொண்டார்கள். நன்றியுரை கனம் ஆலோசனை சங்க உறுப்பினர் திரு. J. ஜான்சன் நேசப்பா அவர்கள் கூறினார்கள். நிறைவுரை மகாகனம் பேராயர் அவர்கள் வழங்க, தஞ்சை மறைமாவட்டத் தலைவர் Rev. கார்ட்டர் ஐயா நிறைவு ஜெபம் செய்த பின்பு மகாகனம் பேராயார் அவர்கள் ஆசிர்வாதத்துடன் கூடுகை நிறைவு பெற்றது.
கருத்துகள்
கருத்துரையிடுக