நமது பொறையார் TBML கல்லூரி இந்த ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் GREEN CHAMPION AWARD 2023 பெற தேர்வு செய்யப் பட்டுள்ளது.தமிழ்நாடு சுற்றுச் சூழல் அமைச்சகம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் இணைந்து வழங்கும் இந்த விருது கடந்த ஆண்டில் நாம் ஒவ்வொருவரும் எடுத்த பசுமை வளாக முயற்சிகளுக்கான ஒரு பெரிய அங்கிகாரம். பாராட்டுப் பத்திரம், ஒரு லட்ச ரூபாய் பணப்பரிசு மற்றும் சான்றிதழ் பெறுகிறோம். இந்த மாநில விருது நம் கல்லூரி வரலாற்றில் ஒரு மைல் கல். ஆதரவளித்து உற்சாகப்படுத்திய பேராயர், திருச்சபை செயலர், ஆட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகத்தினருக்கும், சாதனைப் பணியில் கரம் இணைத்த பேராசிரியர்கள் , ஊழியர்கள் மற்றும் மாணவச் செல்வங்களுக்கும் நன்றிகள் பல.திட்ட அறிக்கையை உருவாக் கித் தந்த Dr. கோபிநாதன், Dr. சிவபாலன் மற்றும் Dr. செல்வம் ஆகியோருக்கு எமது பாராட்டுக்கள்.நமது வளாகத்தில் உருவாக்கப் பட்டுள்ள Miyawaski குறுங்காடு நமது சிறப்புக்கு சிறப்பு சேர்த்துள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக