திட்ட விளக்கப் பொதுக்கூட்டம் - தமிழ்நாடு அரசு சிறுபான்மை மற்றும் பொருளாதார மேம்பாட்டு கழகம்

24-09-24  தமிழ்நாடு அரசு சிறுபான்மை மற்றும் பொருளாதார மேம்பாட்டு கழகம், திட்ட விளக்கப் பொதுக்கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய சமய தலைவர்களின் முன்பு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதன் டாம்கோ தலைவர், மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்,  சட்டமன்ற உறுப்பினர்கள் பெரியகுளம், ஆண்டிபட்டி ,மற்றும் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் கூட்டுறவு வங்கி தலைவர்கள் கிருத்துவ பேராயர்கள், ஆயர்கள் மற்றும் இஸ்லாமிய தலைவர்கள் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசின் திட்டங்களை நன்கு கேட்டறிந்து அதற்குரிய படிவங்களை பெற்றுக் கொண்டனர். சுமார் 300 நண்பர்கள்  இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். நமது திருச்சபை சார்பில் டாக்டர் எம். ஜான்சன் (இயக்குனர், சமுதாய பொருளாதார மேம்பாட்டு வாரியம் SEDB) நமது திருச்சபை சார்பாக பங்கு பெற்றார்கள். நமது பேராயர் சார்பில் தலைவருக்கு வாழ்த்து சொல்லி, நமது திருச்சபையில் செயல்பாடுகளை விளக்கிச் சொன்னார்கள். கடந்த  20 ம் தேதி மதுரையில் நடந்த கூட்டத்தில் நமது SEDB வாரியத் தலைவர் திரு.S. ரஞ்சித் பிரபு அவர்கள் கலந்துகொண்டு நமது செயல்பாடுகளை விளக்கினார்கள்.நாளை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அடுத்த கட்ட கூட்டம் நடைபெறுகிறது.




கருத்துகள்