20.08.2024 TELC பெண்கள் கிறிஸ்தவ மேல்நிலைப்பள்ளி தஞ்சாவூரில் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மூலம் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதற்கு முன் நின்று ஏற்பாடு செய்த நமது திருச்சபையின் பேராயர், ஆலோசனை சங்க செயலாளர், உயர் கல்விக் கழகத் தலைவர், மருத்துவமனை இயக்குனர், உதவி இயக்குனர், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரை மனதார பாராட்டுகிறோம். இந்த இலவச மருத்துவ முகாமை சிறப்பாக நடத்திக் கொடுத்த உதவி இயக்குனர் முனைவர்.அ. அகிலன் அருண்குமார் ஐயா அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.இந்த முகாமை மத்திய மண்டல கண்காணிப்பு ஆயர் Rev.M.இரத்தினம் ஐயா அவர்கள் ஜெபித்து துவக்கி வைத்தார்கள், கனம் ஆலோசனை சங்க உறுப்பினரும், பள்ளியின் நிர்வாகியுமான Rev.Dr.S. தாமஸ் கென்னடி ஐயா அவர்கள் முன்னிலை வகித்து இந்த முகாமை நடத்தி கொடுத்தார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக