MoU - "Church of Stockholm Diocese, Sweden" and "TELC"

10 அக்டோபர் 2024, ஸ்டாக்ஹோம், சுவீடன். கர்த்தரின் பெரிதான கிருபையால், நமது தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபைக்கும், "Church of Stockholm Diocese, Sweden" MoU (Memorandum  of Understanding) புரிந்துணர்வு ஒப்பந்தம், தரங்கை மகாகனம் அத்தியட்சர் Rt.Rev.Dr.A. கிறிஸ்டியன் சாம்ராஜ் ஐயா அவர்களும், "Church of Stockholm Diocese, Sweden" மகாகனம் பேராயர் Rt.Rev.Dr. Andreas Holmberg அவர்களும் Church of Stockholm Diocese, Sweden பேராலயத்தில் கையெழுத்திட்டனர். பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த புதிய நட்பையும், அதிகாரபூர்வ உறவையும் ஏற்படுத்திட பெரிதும் முயற்சியை எடுத்த நமது மகாகனம் பேராயர் அவர்களையும், இந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்த மூவொருமை கடவுளுக்கும் நன்றிகளை ஏறெடுப்போம். இந்த நிகழ்வினை ஒரு திருவிழாவாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். சுவீடன் நாட்டு அனைத்து பத்திரிக்கையாளர்களும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வில் கலந்து கொண்டது சிறப்பு. கர்த்தரின் அளவற்ற கிருபையால் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இதன் மூலம் தசுலுதி - Church of Stockholm Diocese, Sweden இருவரும் பங்காளர்களாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.










கருத்துகள்