Sweden Parliament Rt.Rev.Dr.A.கிறிஸ்டியன் சாம்ராஜ்


சுவீடன் 15-10-2024 Swedish Mission தனது மிஷனரி பணிகளை தொடங்கி 150ஆம் ஆண்டை கொண்டாடும் இந்த வேளையில்,சுவீடன் பாராளுமன்றத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தரங்கை மகாகனம் அத்தியட்சர்
Rt.Rev.Dr.A.கிறிஸ்டியன் சாம்ராஜ்  ஐயா அவர்கள்  அழைக்கப்பட்டார்கள், இந்தியாவில் பல்வேறு திருச்சபைகளில் சுவீடன் தனது மிஷனரி பணிகளை மேற்கொண்டு இருந்தும், நமது தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையை மிக முக்கிய பங்காளராக கருதி, நமக்கு சிறப்பு அழைப்பை விடுத்து, விட்டுப்போன பங்காளர் உறவை மீண்டும் புதுப்பித்து கொடுத்துள்ளது. மகாகனம் பேராயர் அவர்கள் சுவீடன் பாராளுமன்றத்தில் " Swedish Mission - TELC " 150 ஆண்டு கால மிஷனரி பங்காளர்களாக இருந்த காலத்தில் அவர்கள் நமக்கு ஆற்றிய கல்விப்பணி, கல்லூரிகள், மருத்துவமனைகள், செவிலியர் கல்லூரி , மருத்துவசேவை, சுவிசேஷ பணிகள் மற்றும் பொது நலசேவை குறித்தும்,  இக்காலத்தில் மிஷனரி பணிகளின் தேவை மற்றும் முக்கியத்துவம் குறித்தும், 1874 ஆம் ஆண்டு தொடங்கி 2024 ஆண்டு வரை 150 ஆண்டுகள் நமக்கும் அவர்களுக்கும் உள்ள மிஷனரி உறவு மற்றும் பங்கை குறித்தும் சுவீடன் பாராளுமன்றத்தில் விவரித்து கூறினார்கள்.  இந்த நிகழ்வில் அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல திருச்சபைத் தலைவர்கள் கலந்துக் கொண்டனர். அவர்கள் உடன் உரையாடும் வாய்ப்பும் கிடைத்தது மகிழ்வான தருணம். இந்த நிகழ்வுகள் நல்ல முறையில் நடந்தேற கிருபை செய்த கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.









கருத்துகள்