மேற்கு மண்டல இரத்ததான முகாம்

24-11-24 திருப்பூர் 1‌ குருசேகரத்தில் மேற்கு மண்டல இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற ஆண்டவர் அருள் கூர்ந்தார்‌. காலை ஆராதனை முடிந்த பிறகு Vice President Rev. J. Stanley Devakaumar ஐயா அவர்களின் தலைமையிலும், கல்வி கழக தலைவர் Rev. V.A.Gunalan Packyaraj ஐயா அவர்களின் முன்னிலையிலும் ஜெபித்து சிறப்பாக துவங்கப்பட்டது. மேற்கு மண்டலத்தின் சபை பிள்ளைகள் வாலிபர்கள் பெரியவர்கள் என 46 நபர்கள் முகாமில் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தார்கள். இந்த நிகழ்வை நடத்த அனுமதி அளித்த திருப்பூர் 1 குருசேகர ஆயர், சபை சங்கம் மற்றும் இளைஞர் இயக்கத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் ‌ . இம்முகாமுக்கு உதவியாக இருந்த காவிரி அறக்கட்டளை நிறுவனத்தாருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இதேபோன்று பணிகள் தொடர தங்களுடைய ஜெபங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.






 ‌

கருத்துகள்