15-12-24 ஞாயிறு மாலை 5 மணிக்கு, திருச்சி தரங்கைவாசம் ஷாலோம் அரங்கில், கிறிஸ்தவ ஒன்றிப்பு & பல்சமய நல்லுறவு கிறிஸ்து பிறப்புப் பெருவிழா, திருச்சி கத்தோலிக்க மறைமாவட்டம், புனித ஜான்பால் பல்சமய உரையாடல் மன்றம் மற்றும் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை இணைந்து நடத்தியது. அனைத்து திருச்சபைகள், இஸ்லாமிய சகோதர இயக்கங்கள் மற்றும் பிறசமய தலைவர்கள் கலந்து கொண்டனர். கிறிஸ்து பிறப்பு நற்செய்தியை தரங்கை மகாகனம் அத்தியட்சர் , Rt.Rev.Dr.A. கிறிஸ்டியன் சாம்ராஜ் அவர்கள் வழங்கினார்கள். பிஷப் ஹீபர் கல்லூரி, தூயதிரித்துவப் பேராலய பாடகர் குழுவினர் பாடல்களையும், சீயோன் ஆலயம், காவிரி கலைத்தொடர்பகம் நடனத்தையும் வழங்கினார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக