BERC 2025வது
ஆண்டுக்கான முதல் உபவாச கூட்டம் 18.01.2025 அன்று,
திருச்சி, பொன்மலைப்பட்டி TELC ஆலயத்தில் நடைபெற்றது.
Rev. எட்வர்ட் ஜான்சன் அவர்கள் ஆரம்ப ஜெபம் செய்து உபவாச கூட்டத்தை ஆரம்பித்தார்கள். Pastor. சிம்சோன் மற்றும் அவரது குழுவினர்கள் பாடல் மற்றும் ஆராதனை வேளையை நடத்திக் கொடுத்தார்கள். அதனைத் தொடர்ந்து இந்தியாவிற்காக,ஊழியங்களுக்காக, தமிழ் சுவிசேஷ லுத்தரன்
திருச்சபைகளுக்காக, BERC ஊழியங்களுக்காக ஜெபங்கள் ஏறெடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து W. பால் ரவீந்திரன், BERC Chairman அவர்கள் கர்த்தருடைய வார்த்தையை பகிர்ந்து கொண்டார்கள். அதனைத் தொடர்ந்து 13வது மறைமாவட்ட பேராயர். டேனியல் ஜெயராஜ் அவர்கள் நிறைவு ஜெபம் செய்து, ஆசீர்வாதம் கூற உபவாச ஜெபம் நிறைவுக்குள்ளாக வந்தது. இந்த உபவாச கூடுகை நடத்துவதற்கு உதவி செய்த திருச்சி, பொன்மலைப்பட்டி ஆயர் , Pastorate Committee members, Elders, ஆலய பணியாளர்கள் யாவருக்கும் நன்றி கூறுகின்றோம். ஆலயத்தின் சார்பாக அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
கருத்துகள்
கருத்துரையிடுக