பட்டணம்புதூரில் புதிதாக மணிக்கூண்டு

கர்த்தருடைய பெரிதான கிருபையினாலே  சூலூர் குருசேகரத்தைச் சேர்ந்த பட்டணம்புதூரில் புதிதாக கட்டப்பட்டு மகா கனம் பேராயர் அவர்களால் கடந்த மே மாதம் திருநிலைப்படுத்தப்பட்ட T.E.L.C  அருள் நாதர் ஆலயத்தில் ரூபாய் 3 லட்சம் செலவில் புதிதாக மணிக்கூண்டு கட்டவும் அதில் புதிய ஆலயமணி பொருத்தவும் ஆண்டவர் கிருபை பாராட்டினார். கடந்த ஞாயிறு 22.12 .2024 அன்று காலை ஆராதனையில் மகா கனம் பேராயர் அவர்களின் ஆசியோடும் அனுமதியோடும்  ஆலய மணியானது திருச்சபையின் துணைத் தலைவர் / சூலூர் குருசேகரத் தலைவர் Rev.J.ஸ்டேன்லி தேவக்குமார் அவர்களால்  ஜெபித்து இயக்கி வைக்கப்பட்டது. இதற்காக நன்கொடைகளை கொடுத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் சபை சங்கத்தின் சார்பில் ஆண்டவரின் திருப்பெயரில் நன்றிகளை உரித்தாக்குகிறோம்.





கருத்துகள்