அருள்புரம் குருசேகரத்தைச் சார்ந்த நம்முடைய நாரணாபுரம் டி.இ.எல்.சி. தொடக்கப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா 2024 23.12.2024 திங்கள்கிழமை பிற்பகல் பள்ளியின் நிர்வாகியும், கனம் ஆலோசனை சங்கத்தின் உறுப்பினரும், மேல்நிலைக் கல்விக்கழகத்தின் தலைவருமான மறைதிரு.V.A.குணாளன் பாக்கியராஜ் ஆயர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்த விழாவில் அருள்புரம் குருசேகரத்தின் சபைகுரு (பொறுப்பு) Cand. E. வின்சென்ட் ரூபஸ் ஆயர், பள்ளியின் முன்னாள் நிர்வாகியும் ஓய்வு பெற்ற ஆயருமான மறைதிரு.D.ஜெயராஜ் ஐயா, நாரணாபுரம் கவுன்சிலர் திரு.தினேஷ்குமார், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் திரு.லிங்க குருசாமி, பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள், அருள்புரம் குருசேகரத்தின் பொறுப்பாளர்கள், பள்ளியின் முன்னாள் மாணவ மாணவிகள், திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.பள்ளியின் நிர்வாகி ஐயா அவர்கள் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துச் செய்தி வழங்கினார்கள்.விழாவில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் நிர்வாகி அவர்களால் வழங்கப்பட்டன.மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் சிறப்புடன் நடைபெற்றது.விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கேக்குகள் வழங்கப்பட்டு ஜெபம் ஆசீர்வாதத்துடன் கிறிஸ்மஸ் விழா இனிதே நிறைவடைந்தது.நிர்வாகி,தலைமையாசிரியர், ஆசிரியர்கள்,பெற்றோர் ஆசிரியர் கழகம்.நாரணாபுரம்.
கருத்துகள்
கருத்துரையிடுக