தரங்கைவாசம் திருச்சி ஜனவரி 23, மத்திய நிர்வாக அலுவலகம், தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் வரவு செலவு கணக்குகளை எஸ் சி சி கூடுகையில் நியமிக்கப்பட்ட எஸ் சி சி தணிக்கையாளர்களால் அனைத்து கணக்குகளும் தணிக்கை செய்யப்பட்டது. இந்த தணிக்கையில் கடந்த ஏழு நாட்களாக 20 உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஒவ்வொரு துறைகளில் வரவு செலவு கணக்குகளையும் தணிக்கை செய்தார்கள். தணிக்கை முடிந்த பின்பு முடிவில் மாலை தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் இந்நாள் பொருளாளர் திரு ஞானப்பிரகாசம் கனம் ஆலோசனை சங்க உறுப்பினர் அவர்கள் கலந்து கொண்டு தணிக்கை குறித்து தன்நிலை விளக்கம் அளித்தார். முன்னாள் பொருளாளர் முனைவர் ஆண்ட்ரூஸ் ரூபன், கனம் ஆலோசனை சங்க உறுப்பினர் அவர்கள் தன்னுடைய அனுபவங்களை எஸ்சிசி தணிக்கையாளர்கள் மத்தியில் பகிர்ந்து கொண்டார். திருச்சபையில் மத்திய கருவூல கணக்கர் திரு பாஸ்கர் அவர்கள் அவருடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டு தணிக்கையாளர்களை பாராட்டினார். கோவை ஈ ஜி ஸ்டான்லி அவர்கள் நன்றி கூறினார். முடிவில் மறைதிரு கார்ட்டர் அவர்களின் ஜெபம் ஆசீர்வாதத்தோடு இக்கூட்டம் முடிவடைந்தது. இந்த தணிக்கை நிகழ்வுகளை புத்தூர் திருச்சபையைச் சார்ந்த தணிக்கையாளர் திரு ரமேஷ் அவர்கள் ஒருங்கிணைத்திருந்தார்.
கருத்துகள்
கருத்துரையிடுக