22.2.25 சனிக்கிழமை காலை 10:30 மணி காரைக்கால், தசுலுதி ஆலயத்தில் வாலிப இளைஞர்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி நடைபெற்றது . மறைதிரு. ஆல்வின் சாந்த ஷீலா தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சியில் சிறப்பு விருந்தினராக TELC இளைஞர் இயக்க பொதுச் செயலாளர் மறைதிரு ஜோஸ்வா நிமலன் அவர்கள் கலந்து கொண்டு திருச்சபை இளைஞர் இயக்க நோக்கம், செயல்பாடுகள் ,கட்டமைப்பு ,உறுப்பினருக்குரிய தகுதிகள், மறைவட்ட இளைஞர்களின் பங்களிப்பு போன்றவைகள் குறித்து மிகச் சிறப்பாக விளக்கி கூறினார்கள். பூவம்,மேலகோட்டுச்சேரி, கொல்லாபுரம் கிராம சபைகளை சார்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டனர்.காரைக்கால் உபதேசியார் திரு.B. ஜெயக்குமார், பூவம் உபதேசியார் திரு.தேசிங்குராஜா, மேல கோட்டுச்சேரி உபதேசியா ர் திரு. தேவ பாலச்சந்தர் ,கொல்லாபுரம் உபதேசியார் திரு.கிதியோன் ஆகியோர் கலந்து கொண்டு கலந்து கொண்டு சிறப்பு பாடல்களை பாடி தேவனை மகிமைப்படுத்தினார்கள். குருசேகர செயலாளர் திரு சாமுவேல் சந்தோஷம் வரவேற்புரை வழங்கினார். திரு ஜாய் ஆசீர் பொருளாளர் நன்றியுரை ஆற்றினார் . கலந்து கொண்ட இளைஞர்களுக்கு புத்தகம் பரிசாக வழங்கப்பட்டன.
கருத்துகள்
கருத்துரையிடுக