Junior ministery scarping ceremony-ஆனைமலை குருசேகரம்

ஆண்டவரின் அருளால்  மாகணம் பேராயர் ஐயா அவர்களின் ஆசீர் மற்றும் வாழ்த்துக்களுடன் ஆனைமலை குருசேகரத்தில் இன்று ( 09.02.2025 ) மறுரூபத்திருநாள் ஞாயிறு ஆராதனை போது  இளையோர் இறைபணி இயக்கம் Junior ministery scarping ceremony சிறப்பாக நடைபெற்றது. இவ் ஆராதனையில் இளையோர் இறை பணி இயக்கத்தின் CHAIRMAN திரு. E. ஐசக் டேவிட் சாந்தகுமார்,அவர்கள் ஆராதனையில் அருளுரையாற்றி இந்நிகழ்வை தொடங்கி வைத்தார். 20 க்கும் மேற்பட்ட இளையோர், JMI யில் இளையோர் இறை பணி இயக்கத்தில் இணைந்தனர். ஆனைமலை குருசேகரத்தின் உபதேசியாரும் நமது திருச்சபையின் சொத்து அதிகாரியுமான திரு. சாலமன் அவர்களும் இவ் ஆராதனையில் கலந்துகொண்டு இளையோர் இறைபணி இயக்கத்திலுள்ள பிள்ளைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.

Rev. கார்த்திக்.

ஆயர். ஆனைமலை குருசேகரம்.






கருத்துகள்