சீகன்பால்க் அருட்பணி இயக்கத்தினுடைய மருத்துவ பயிற்சி முகாம் கனம் பேராயர் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் பேரில் கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி முதல் 16ம் தேதி வரை தரங்கம்பாடியில் உள்ள சீகன்பால்க் ஆன்மீக மையத்தில் நான்கு நாட்கள் நடைபெற்றது. இந்த நிகழ்வை ZMM உடன் இணைந்து CMAI
நிறுவனம் நடத்திக் கொடுத்தது. மிஷனரிகள் பணிக் களங்களில் எதிர்பாராமல் ஏற்படும் மருத்துவ பிரச்சினைகளுக்கு எப்படி தீர்வு காண்பது என்பது பற்றி இந்த நிகழ்வில் வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையின் டாக்டர்களோடு மற்றும் திருச்சியில் உள்ள CSI மிஷின் மருத்துவமனையின் உடைய செவிலியர்கள் மருத்துவமனை அதிகாரிகள், மதுரை ஜெயராஜ் அன்னபாக்கியம் மெடிக்கல் காலேஜ் டாக்டர்கள், செவிலியர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் நம்முடைய தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் பொருளாளர் திரு ஞானப்பிரகாசம் ஐயா அவர்கள் கலந்து கொண்டு மிசினெரிகளுக்கு வேதாகமம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கி, மருத்துவ அதிகாரிகளை கௌரவித்து மிஷனரி பணித்தளங்களில் மருத்துவத்துறையின் முக்கியத்துவத்தை குறித்தும் திருச்சபையின் பங்களிப்பைக் குறித்தும் விவரித்து கூறினார்கள். கனம் பேராயர் ஐயா அவர்களின் ஆசியையும் கனம் செயலர் ஐயா மற்றும் கனம் ஆலோசனை சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரின் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டார்கள். இந்த நிகழ்வில் நமது திருச்சபையின் சொத்து வாரிய சேர்மன் திரு சுந்தர் ஐயா அவர்களும் கெம்ஸ் டவுன் பள்ளியின் தாளாளர் திரு வாட்சன் ஐயா அவர்களும் மற்றும் புரசைவாக்கம் மறை மாவட்ட தலைவரும் ஆயருமான Rev Dr JG ஜேக்கப் சுந்தர் சிங் அய்யா அவர்களும் கலந்து கொண்டு திருச்சபை வரலாற்றில் மருத்துவப் துறையின் பங்களிப்பை குறித்தும் விவரித்தார்கள். மேலும் சீகன்பால்க் ஆன்மீக மையத்தின் இயக்குனர் Rev சாம்சன் மோசஸ் ஐயா அவர்கள் கலந்து கொண்டு திருச்சபையின் நிறுவனர் Rev பர்த்தலோமேயு சீகன்பால்க் ஐயா அவர்களின் தொண்டை நினைவு கூர்ந்து இந்நிகழ்வை சிறப்பித்துக் கொடுத்தார்கள். இந்த நிகழ்வில் சுமார் 41 மிஷினரிகளும் 11 தன்னார்வலர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வின் மூலம் புதிய எழுச்சியும் புத்துணர்வும் பெற்றவர்களாய் மிஷனரிகள் கடந்து சென்றனர்.பீகார், ஒடிசா, தெலுங்கானா ஆந்திரா, கேரளா, தமிழகம், பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து பலர் கலந்து கொண்டனர்.புது டெல்லியில் உள்ள CMAI அலுவலகத்தின் பிரதிநிதிகளாக Rev டேவிட் எபினேசர்,திரு சந்தோஷ் அவர்களும் திருமதி ஷாலினி அவர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அனைத்து CMAI நிறுவனத்தின் உடைய அதிகாரிகளுக்கும் Dr பிரியா ஜான் அவர்களுக்கும் மகாகனம் பேராயர் அய்யா அவர்களுக்கும் ZMM சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் 🙏🙏🙏இயக்குனர் ZMM
கருத்துகள்
கருத்துரையிடுக