அகில உலகப் பெண்கள் தின பெண்களுக்கான ஒரு நாள் ஜெபக்கூடுகை - திருப்பூர் 1

கர்த்தருடைய பெரிதான கிருபையினாலே  கடந்த 8 ம் தேதி சனிக்கிழமை அன்று ( 08.03.2025)  அகில உலகப் பெண்கள் தினத்தில்  திருப்பூர் 1 குருசேகரத்தில் பெண்களுக்கான ஒரு நாள் ஜெபக்கூடுகை முன்னேறிச் செல்,செயலை துரிதப்படுத்து என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் திருப்பூர் 1 குருசேகரத்தை சேர்ந்த 125க்கும் மேற்பட்ட தாய்மார்கள், சகோதரிகள் மற்றும்  வாலிப பெண் பிள்ளைகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். Rev.Dr.ஜாய்ஸ் எஸ்தர் அவர்கள் இக்கூடுகையில் கலந்து கொண்டு கர்த்தருடைய செய்தியை அளித்து பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வையும் குறித்து கலந்துரையாடலையும் மேற்கொண்டு ஆலோசனை வழங்கினார்கள். குழுவாக கலந்தாலோசித்தல், வேத வினாடி வினா, நாடகம், நடனம், விளையாட்டு போட்டிகள், சிறப்பு பாடல் போன்றவைகள் இக்கூடுகையில் இடம் பெற்றன. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்.

Rev J Stanley Devakumar.

Ven.Church Council Member

Vice President, 

TELC








கருத்துகள்