21.03.2025 தஞ்சாவூர் பெதஸ்தா சிற்றாலயத்தில் ஆன்மீக ஒடுக்கக்கூட்டம் நடைபெற்றது. நம்பிக்கையின் மன்றாட்டு இறைவனின் அருகில் செல்ல உதவி செய்யும். நம்பிக்கையின் மன்றாட்டு இறையாசியை பெற்றுக் கொள்ள ஊக்கப்படுத்தும். நம்பிக்கையின் மன்றாட்டு உன்னதர் இயேசுவிடம் இருந்து உயர்வான பாராட்டை கொடுக்கும். நம்பிக்கை மன்றாட்டு தடைகளை அகற்றும். நம்பிக்கை மன்றாட்டு தயவு பெற உதவி செய்யும். நம்பிக்கையின் மன்றாட்டு தற்பரனோடு போராடி ஆசிர்வாதத்தை கொண்டு வரும் .நம்பிக்கையோடு இறைவனிடம் சரணாகதி அடைந்தால் சாதனை படைக்க முடியும். ஜெபம் ஆசிர்வாதத்துடன் கூட்டம் நிறைவு பெற்றது.இதில் தியாக்கோனிய அம்மாக்கள் , Cand Esther Aruan Sharmilee , Mrs. Angel Sathyavathy, Administrator அம்மா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இறுதியில் அவர்களுக்கு காய்கறிகள் கொடுத்து மகிழ்ந்தோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக