16-4-25 புதன்கிழமை காலை 9.30 முதல் 2 மணி வரை, தசுலுதி மத்திய நிர்வாக அலுவலக ஊழியர்களுக்கான தபசு கால ஒடுக்கக் கூட்டம் YMCA அரங்கில் நடைபெற்றது. இந்த கூடுகைக்கு தரங்கை மகாகனம் அத்தியட்சர்/ தலைவர் Rt.Rev.Dr.A. கிறிஸ்டியன் சாம்ராஜ் ஐயா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பான தேவ செய்தியை அளித்து ஊழியர்களுக்கு ஊக்கமளித்தார்கள். Rev.A.Suresh Kumar, Trichy-Tanjore Diocese, Bishop Commissary & Treasurer கலந்து கொண்டு அநேக வேதத்தின் விளக்கங்களை வழங்கினார்கள். இந்த கூடுகையில் தசுலுதி பொருளாளர், உயர் கல்வி கழகத் தலைவர், கனம் ஆலோசனை சங்க உறுப்பினர், மறைமாவட்டத் தலைவர், ஆயர் பெருமக்கள், கணக்காளர் மற்றும் இருபால் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக