பெண்கள் ஐக்கிய சங்க சிறப்பு ஜெப கூடுகை

தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை பெண்கள் ஐக்கிய சங்கத்தின் சார்பில் இன்று கல்வி நிறுவனங்களுக்காக ஏறெடுக்கப்பட்ட சிறப்பு ஜெப கூடுகை. பொள்ளாச்சி மறைமாவட்ட பள்ளி ஆசிரியர்களின் கூடுகை அருள்புரம் அருள் வேந்தர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது. கூடுகையில் மேல்நிலை கல்வி கழக தலைவரும் அருள் புரம் குருசேகர சபை சங்க தலைவர் ஆகிய மறைதிரு. குணாளன் பாக்யராஜ் பொள்ளாச்சி மறை மாவட்ட தலைவர் மறைத்திரு. சார்லஸ் ஐசக்ராஜ்  ஓய்வு பெற்ற ஆயர் மறைதிரு. கிறிஸ்டோபர் செல்லப்பா  உதவி ஆயர்கள் ரூபஸ் மற்றும் டேனியல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த ஜெப கூடுகையை பொள்ளாச்சி மறை மாவட்ட பெண்கள் ஐக்கிய சங்க செயலர் திருமதி ஏஞ்சலின் ரோசலின் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்.



கருத்துகள்