BERC தரிசனக்கூடுகை

கர்த்தருடைய பெரிதான கிருபையால்  BERCன் குருசேகர பொறுப்பாளர்களின்  தரிசனக்கூடுகை 31.05.2025 அன்று காரைக்குடி , TELC தெய்வீக ஆலயத்தில் காலை 9.30 மணி முதல்  மதியம் 2 மணி வரை  வெகு சிறப்பாக நடைபெற்றது. நான்கு ஆலயங்களில் இருந்து  BERC ஊழியத்திற்காக தெரிந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்கள் பங்கு பெற்றார்கள். முதல் பகுதியில் அழைப்பும், திருச்சபையின் பாரம்,திருச்சபையின் உயிர்மீட்சி என்ற தலைப்பின் கீழே தரிசன செய்தி வழங்கப்பட்டது. 2வது பகுதியில் குருசேகர வாரியாக அமர்ந்து ஜெபித்து, BERC மூலமாக செயல்பட வேண்டிய திட்டங்கள் தீர்மானமாக ஏற்கப்பட்டது. கூட்டத்தை நடத்துவதற்கு காரைக்குடி ஆயர் Rev. ஜோயல், செயலாளர் திரு. ஹென்றி பாஸ்கர் மற்றும் பொருளாளர் அனைத்து சபை சங்க உறுப்பினர்களும் சிறப்பாக  ஆயத்தப்படுத்தி கொடுத்தார்கள்.   அனைவருக்கும் மிகச் சிறப்பான மதிய உணவினை வழங்கி, ஜெபக்கூடுகையை மகிழ்ச்சியாக, நிறைவாக முடிக்க ஏற்பாடு செய்தார்கள். அனைவருக்கும் BERC சார்பாக இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி சொல்கிறோம்.





கருத்துகள்