பெங்களூர் மண்டல பெ.ஐ. சங்க கூடுகை பெங்களூர்

கர்த்தருடைய பெரிதான கிருபையால் கடந்த 1-6-2025 அன்று பெங்களூர் மண்டல பெ.ஐ. சங்க கூடுகை பெங்களூர் பாவநாசர் ஆலயத்தில் நடைபெற்றது. இதில் இம்மண்டலத்தைச் சார்ந்த 4 குருசேகரங்களைச் சேர்ந்த 75 பெண்களும், 3 ஆயர்களும் உற்சாகமாகக் கலந்துகொண்டனர். காலை 11:30 முதல் 4 மணிவரை நடந்த இக்கூட்டத்தில் தசுலுதி பெ.ஐ.சங்க பொதுச்செயலர் மறைதிருமதி கிருபலதா ஆனந்த் சிறப்பு செய்தியாளராகக் கலந்துகொண்டார்கள்.

மதிய உணவுக்குப் பின்னர் பெ.ஐ.சங்க செயல்பாடுகளையும், எதிர்காலத்திட்டங்களையும் குறித்து பொதுச்செயலர் பெண்களுடன் கலந்துரையாடினார்கள். மண்டலக் கூடுகையின் ஏற்பாடுகளை மண்டலச் செயலர் திருமதி சந்திரா எபினேசர், பாவநாசர் ஆலயப்பொருளர் திருமதி ஷாமினி வசீகரன் ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தினர்.





கருத்துகள்