2-7-25 திருச்சி தரங்கைவாசத்தில் உள்ள BHM உயர்நிலை பள்ளியின் விளையாட்டு மைதானத்தை அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள Shine Charity என்ற அமைப்பின் உதவியுடன் மைதானம் மேம்படுத்துவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடைபெற்றது. இதில் தரங்கை மகாகனம் அத்தியட்சர் , உயர் கல்விக் கழகத் தலைவர், பொருளாளர், தொடக்க கல்வி கழகத் தலைவர், கனம் ஆலோசனை சங்க உறுப்பினர், தூய திருத்துவ பேராலயத்தின் சபை குருக்கள், சபை சங்க செயலாளர், பொருளாளர், ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் தாளாளர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் ஆகியோர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. மகாகனம் பேராயர் ஆசீர்வதிக்க "சயின் சாரிட்டியின்" நிறுவனர் கல்வெட்டை திறந்து வைக்க, விழா இனிதே நிறைவுற்றது.இதன் மூலம் பள்ளியின் விளையாட்டு மைதானம் சுற்றுவழி அடைக்கப்பட்டு விளையாட்டுத் திடல்கள் நிறுவப்படுதல், மைதானத்தை சமப்படுத்துதல், மேடை அமைத்தல், நடைபாதை அமைத்தல் போன்ற காரியங்கள் இதன் மூலம் நிறைவேற்றப்பட உள்ளன.




கருத்துகள்
கருத்துரையிடுக