சின்ன கொல்லப்பட்டி என்ற கிராம திருச்சபை, குருசேகரம் என்ற அந்தஸ்தை பெற்று, நமது மகாகனம் அத்தியட்சர் அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டு, திருநிலைப்படுத்தப் பட்டது. இந்த ஆராதனையில், நமது பேராயர் அம்மா அவர்களும், கனம் ஆலோசனை சங்க உறுப்பினர்களும், பல ஆயர்பெருமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். இந்த திருநாளை சிறப்புச் செய்யும் வண்ணமாக புதிதாக பெண்கள் ஐக்கிய சங்க கிளை ஆரம்பிக்கப்பட்டது. சுமார் 48 பெண்கள் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டு, பெண்கள் சங்கத்தில், தங்களை பதிவு செய்து கொண்டார்கள் .நமது பெண்கள் ஐக்கிய சங்க குடும்பம் விரிவடைந்து உள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்கள் அனைவரிடத்திலும் பகிர்ந்து கொள்கின்றேன். இந்த சிறப்பான நிகழ்வினை இனிதே நடத்திக் கொடுத்த, ஆயர் மறைத்திரு ஜான் ராஜசிங் அவர்களுக்கும், அவர்களின் துணைவி யாருக்கும் த சு லு தி திருச்சபையின் பெண்கள் ஐக்கிய சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுச் செயலர்,
மறைதிருமதி. கிருப லதா ஆனந்த்
கருத்துகள்
கருத்துரையிடுக