Seminary Hall Rededication - Tranquebar

5-8-2025 தரங்கம்பாடி, இந்திய புராட்டஸ்டண்ட் வரலாற்றின் மிகவும் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு இடம். 1706 ஆம் ஆண்டு ஜுலை 9 ஆம் தேதி தரங்கம்பாடியில் வந்திறங்கிய மிஷனரிகள் சீகன்பால்கு, புளுட்சோ இவர்கள் இந்த தேசத்திற்கு ஆற்றிய பங்குகள் அநேகம். 1741 ஆம் ஆண்டு "Seminary Hall" ஒன்றை கட்டினார்கள். தசுலுதி பிஷப் ஜான்சன் நினைவு பள்ளி அமைந்துள்ள வளாகத்தில் சீகன்பால்கு இல்லம் அருகில் இந்த ஹால் உள்ளது. 1718 ஆம் ஆண்டு சீகன்பால்கு ஆயர் அவர்களால் ஞானஸ்நானம் பெற்ற Rev.C. ஆரோன் அவர்கள், 1733 ல் குருபட்டம் பெற்ற முதல் இந்திய புராட்டஸ்டண்ட் ஆயர் ஆவார். 5-8-2025 இன்று அந்த செமினரி ஹால் Rev.C. ஆரோன் அவர்கள் வம்சா வழியினரின் மூலம் புதுப்பிக்கப்பட்டு தரங்கை மகாகனம் அத்தியட்சர் அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டது. Rev.C. ஆரோன் அவர்கள் ஞானஸ்நானம் பெற்று 307 ஆம் ஆண்டு நினைவும் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிகழ்வில் தசுலுதி கல்வி கழகத் தலைவர்கள், மறைமாவட்டத் தலைவர்கள், ஆயர் பெருமக்கள், அமெரிக்காவில் இருந்து இதற்காக வந்துள்ள Rev.c ஆரோன் ஆயர் அவர்களின் குடும்பத்தின் சிறப்பு விருந்தினர்கள், சபை சங்க உறுப்பினர்கள் மற்றும் சபையார் திரளாக கலந்து கொண்டனர். நமது திருச்சபை வரலாற்றில் இந்த நிகழ்வு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக உள்ளது.










கருத்துகள்