BERC மற்றும் ZMM Prayer

கனம் பேராயர் அவர்களின் அறிவுறுத்தலின்படி BERC மற்றும் ZMM இணைந்து இன்று (11.10.2025) சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1.00 மணி வரை  வாழவந்தான் கோட்டை, துவாக்குடி டோல் பிளாசா அருகில் உள்ள நமது TELC உலக மீட்பர் ஆலயத்தில் உபவாச கூடுகை மிகுந்த ஆசீர்வாதமாக நடைபெற்று முடிந்தது. அதில் நமது கனம் பேராயர் அவர்களும், மற்ற ஆயர் பெருமக்களும், நமது திருச்சி மறை மாவட்டத்தில் இருந்து அநேக விசுவாசிகளும் உற்சாகமாக கலந்து கொண்டு ஊக்கமாக ஜெபித்தார்கள். உலகம், தேச எழுப்புதலுக்காக, ஊழியங்களுக்காக, திருச்சபைகளுக்காக, விசேஷமாக நம்முடைய தமிழ் சுவிசேஷ லுத்ரன் திருச்சபைக்காக, அதனுடைய பணிகளுக்காக, ஊழியங்களுக்காக 5 நபர்கள் முன்னால் வந்து ஒவ்வொருவரும் ஜெப ஊழியத்தை நடத்தினார்கள். காலை 10மணி முதல் 10:30 வரைக்கும் பாடல் ஆராதனை தேவப்பிரசன்னத்தோடு நடந்தது.  நமது கனம் பேராயர் அவர்கள் ஒரு ஆழமான ஜெபத்திற்கான நற்செய்தி எழுப்புதலுக்கு அடித்தளமான கர்த்தருடைய வார்த்தையை அப்போஸ்தலர் 5ம் அதிகாரம் 12ம் வசனத்தில் இருந்து பகிர்ந்து கொண்டார்கள்.இந்த உபவாச கூடுகையில் 90 நபர்கள் கலந்து கொண்டார்கள். கலந்து கொண்ட யாவருக்கும் மதிய உணவு கொடுக்க கர்த்தர் கிருபை செய்தார்.இந்த கூடுகை மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது. கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக. 





இப்படிக்கு,

BERC Chairman,

ZMM, Director


கருத்துகள்