புதிய பாடத்திட்டம் அறிமுகம் - சிறுவர் நல வாரியம் மற்றும் இளையோர் இறைப்பணி இயக்கம்

04.10.2025 திருச்சி, தரங்கை வாசம், தசுலுதி மகாகனம் பேராயரின் வழிகாட்டுதலின்படி காலை  10.00 மணி அளவில் தூய திரித்துவ பேராலயத்தில், சிறுவர் நல வாரியம் மற்றும் இளையோர் இறைப்பணி இயக்கம் இணைந்து டேவிட்சி C  குக் அவர்கள் எழுதிய புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு, ஒருநாள் பயிற்சி நடைபெற்றது. இதில் சுமார் 50  ஓய்வுநாள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் JMI பயிற்றுவிப்பாளர்கள் கலந்து கொண்டார்கள். தரங்கைவாசம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, செங்கரையூர், புள்ளம்பாடி, கிராப்பட்டி, புத்தூர், சுப்ரமணியபுரம், பொன்மலைப்பட்டி, மேட்டுப்பட்டி, கரம்பக்குடி, திருக்காட்டுப்பள்ளி, திருவெறும்பூர், பெரம்பலூர் மற்றும் ரெட்டிபாளையம் ஆகிய குருசேகரங்களிலிருந்து கலந்து கொண்டார்கள்.   இளையோர் இறைப்பணி இயக்க தலைவர் திரு ஐசக் டேவிட் சாந்தகுமார் அவர்களும் மற்றும்  சிறுவர் நல வாரியத்தின்  பொதுச்செயலாளர் மறைதிரு ஆண்ட்ரூஸ் டேவிட்சன் அவர்களும் இதன் நிகழ்வுகளை சிறப்பாக ஒழுங்கு செய்தார்கள். இந்த கூட்டம் சிறப்பாக நடத்த ஒத்துழைப்பு கொடுத்த தூய திரித்துவ பேராலய  சபைகுருவுக்கும் உதவி சபைகுருவுக்கும், சபை சங்கத்திற்கும் நன்றிகளை உரித்தாக்குகிறோம். இந்த நிகழ்வில் தசுலுதி துணைத் தலைவர், உயர் கல்வி கழகத் தலைவர் கலந்து கொண்டு புதிய பாடத்திட்ட புத்தகத்தை பெற்றுக்கொண்டு வாழ்த்தினர். இறுதியாக  தரங்கை மகாகனம் அத்தியட்சர் அவர்கள் வாழ்த்துதலும் ஆசீர்வதத்துடன் பயிற்சி இனிதே நிறைவடைந்தது.









கருத்துகள்